Saturday, May 22, 2010

முதல் பதிவு

நினைவுகள் பல நேரங்களில் மழுங்கியும்,சில நேரங்களில் கோடி சூரியப்பிரகாசமாகவும்,வெளிப்படுகின்றன.இது மூளையின் எந்த மடிப்பிலிருந்து புறப்படுகிறது எனத்தெரியவில்லை.இந்த மாஜிக் புரிபடவில்லை.ஒரு சில நாட்களில் என் மணியுடன் பரபரப்பில்லாத மாலைப்பொழுதுகளில் பேசித்தீர்க்கும் போது,சில இளமைக்கால நினைவுகள் நான்ஸ்டாப் கொண்டாட்டமாக வந்து விழும்.எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.அப்படி சில நினைவுகளை மணியுடன் பகிந்து கொண்டபோது இதனை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்துவார்.நான் என்ன மகானா? எனது அனுபவங்கள் யாருக்கு வேண்டும்? என நான் மறுத்த போது, நமக்காக பதிவு செய்.ஒரு டைரி எழுதுவது மாதிரி,நம் குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி,நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து
கொள்வது மாதிரி, என தூண்டிவிடுவார்.சமீபத்தில் மணியுடனான பதிவர்கள் குடும்பத்தினர் சந்திப்பு ஊட்டியில் நடந்தது.அதில் நானும் கலந்து கொண்டேன்.அந்த பாதிப்பில் ஊட்டியிலிருந்து வந்த உடனேயே பிளாக் துவங்கவேண்டும் என நினைத்து இன்றுதான் முடிந்தது.இனி எழுதுவேன்

2 comments:

  1. மேடம், முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    விஷயம் இல்லாத நானே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
    இவ்வளவு யோசிக்கும் தாங்கள் இவ்வளவு நாட்கள் தாமதப்படுத்தி விட்டீர்களே?
    வெங்கடசுப்ரமணியம் சார் ஊக்குவிக்கும்போது அப்புறம் என்ன?
    மீண்டும் வலையுலக வருகைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete