

சின்ன வயசுல ரெண்டாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன்.
அப்ப நாங்க சோளிங்கரில் இருந்தோம். மார்கழி மாதத்தில் தினமும் காலைல
அம்மாவோட தெரு முனையில ஒரு பெருமாள் கோயிலுக்கு போவோம். அப்ப
கோயில்ல திருப்பாவை போட்டி அறிவிக்கப்பட்டிருந்ததுன்னு நினைவு. நான்
கௌரி அக்கா உமா மூன்று பேரும் பெயர் கொடுத்திருந்தோம்;
அக்கா ஏழு பாசுரம்
உமா நாலு பாசுரம்
நான் ரெண்டு பாசுரம்..
அந்த வீடு ஒரு டீச்சர் வீடு நாலு பக்க தாவாரம் நடுவுல மித்தம் ரெண்டு கட்டு வீடு
சமையல் அறையிலேயே வெந்நீர் போடும் போது அம்மா பாசுரம் சொல்லி
தருவா..பாசுரத்திற்கு நடுவுல நிறைய சரிகமபதநி சேர்த்து சொல்லி தருவா.
அம்மா நன்றாகப் பாடுவா ஆனா ரொம்ப அமைதியா நிதானமா இருக்கும்.
போட்டி நாள் அண்னிக்கு காலைல புது கவுன் போட்டுண்டு கோயிலுக்கு
போனதா நினைவு.முதல்ல அக்கா , அப்புறம் மீடியம் சொல்ற மாமியாத்து ஸ்ரீமதி
அக்காவை பாசுரத்துல நடுவுல ஒரு லைன் சொல்லி அந்த பாசுரம் எதுவோ
அத பாடச்சொன்னார்கள். ஸ்ரீமதி அக்கா சொதப்பிட்டா. அடுத்து உமா அவளுக்கு
முணாவது பாசுரம் கடைசி லைன சொல்லி பாடச்சொன்னா அவளுக்கு போட்டி
அந்த எதிர்த்தாத்து மாமியோட ரெண்டாவது பொண்ணு சச்சு தான் .
உமா பாசுரத்தை கரெக்டா பாடினா ஆனா ஆர்வத்துல நடுவில் ரெண்டு முன்று
லைனவுட்டுட்டா. ஐந்து வயசுக்குள்ள இருப்பவர்களிள் நிரைய பேர் இருந்தோம்.
நான் ரெண்டாவது மூனாவது ஆளாதான் கேட்டா ரெண்டாவது பாசுரம் வையத்து
வாழவீர்காள் அதுவும் முடிவு சொல்லிதான் கேட்டா ஆனா அம்மா சொல்லி
கொடுத்தா மாதிரியே அப்படியே அபிநயம் பிடிச்சு பாடியாச்சு முதல் பரிசு பெரிய
மலைல தான் பரிசளிப்பு பெரியமலைன்னா நரசிம்சாமி மலை யோக நரசிம்மர்;
மொத்தம் 1350 படிக்கு மேல ஏறனும்.
அண்ணா ஊரிலிருந்து வந்திருந்தா, நானும் அண்ணாவும்தான பரிசு வாங்க
போனோம் பெரிய மலை ஏறனும். காலைல கிளம்பினோம் படியெ ஏற ஏற
அனுமான் வால் மாதிரி நீண்டுண்டே போச்சு. என்னால ஏற முடியல. அண்ணா
என்னை தூக்கிண்டு ஏறி போனா 5 படி இருக்கும் போதே என்னோட பெயரை
கூப்பிட்டாச்சு 3 முறை ஐயந்தி ஐயந்தி ...... கூட்டமா வேற இருந்தது.
அண்ணாதான் என்னை தூக்கி பட்டர் கிட்டக இவ தான்னு சொல்ல பரிசு
வாங்கினேன் என் வாழ்நாளில் முதலில் வாங்கிய பரிசு.
மாறாத நினைவு . பிறகு 5ஆம் வகுப்பு படிக்கும் போது பிந்துசாரன் ராஜா வேஷம்
, 6வது ல பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நாடகத்தில் பாஞ்சாலி இப்படி நிறைய