Friday, August 20, 2010

மேல்பாடி நினைவுகள் 2

அண்ணா பெங்களுரில் வேலை பார்த்தார். அவர் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவார். அவர் நான் இநத தேதியில் வரேண்ணு லெட்டர் போட்டுடுவார். யாருக்கு என்ன வேணும் அப்படின்னு அவரவர்களே தனித்தனியா லெட்டர் எழுதனும் என்பது அண்ணாவின் கண்டிஷன்,அதிலும் இங்கிலீசுல எழுதற லெட்டர்க்கு என்ன கேட்டாலும் அத உடனே கிடத்துவிடும் என்பது அண்ணாவின் அடிக்குறிப்பு. அவவளவுதான்
எங்ககிட்ட இங்கலீசு படற பாடு இருக்கே.... அலுமினிய பெட்டி புஸ்தகம் எடுத்துண்டு போக, ஜாமின்றி பாக்ஸ், பென்சில், பேனா ,கவுன், என்று நிறைய....எங்களது பட்டியல் நீளும். பாவம் அண்ணா என்னா சம்பளம் வாங்குவா எப்படி சாப்பிடுவா அதெல்லாம் தெரியாது கேட்டதுல நிசச்சியம் பாதியாவது கிடைக்கும்.ஆம்மாவுக்கும் தேவைகள் இருக்கும் ஆனா சொல்லவோ கேட்கவோ கூச்சமா,என்னமோ கேட்டதாக நினைவில்லை.ஒருவேளை எனக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம்.
கௌரி அக்காகிட்ட மட்டும் சொல்வாள் “பால் குக்கர், அரிசி குக்கர் ,கணமான வெள்ள கலர்ல இருக்கற வாணலி, இதயெல்லாம் இருந்தா நன்னா இருக்கும் அண்ணாகிட்ட கேட்டு வாங்கிக்கோ கல்யாணம்
ஆனா குடும்ப நடத்தும் போது தேவைப்படும் அபபடின்னு சொலலுவா.” அக்காவுக்கும் அம்மாவுக்கும் வயசு ரொம்ப வித்தியாசம் கிடையாது.(அக்காவும் அண்ணாவும் மூத்ததாரப் பிள்ளைகள்) ஆனா அக்கா அண்ணாகிட்ட நம்மாத்துக்கு இதெல்லாம் வேணும் அப்படின்னு அம்மா ஆசையை தன் ஆசையா சொல்லி வாங்கிண்டு வரச் சொல்லி லெட்டர் போட்டுவா. அண்ணா ஊரிலிருந்து வர்றா அப்படின்னா எங்களுக்கு தூக்கமே வாராது . இராத்திரி முழுசும் தீபாவளி முதல் நாள் மாதிரி முழுச்சுண்டு போனதரவ வந்தப்ப சொன்ன ஜோக் (கடி மொக்கை தான்) பெங்களூரிலே பாத்ததா சொன்ன விஷயங்கள் எல்லாம் ரீவைண்டிங் ஆகும். காலைல ஆறு மணிக்கு பொன்னை பஸ் வரும் அதுல தான் அண்ணா வருவா. நண்டு சிண்டுகள் நாங்க எல்லோரும் அபபாவோட காக்கி சட்டையை ஆளுக்கு ஒண்ணு மாட்டிண்டு சாலையோரமிருந்த பெரிய பாறை உருட்டு கல்லுல உக்காந்துண்டு அண்ணாவின் வருகைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். ஆனா அண்ணா எங்களை எப்பவும் ஏமாத்தினது கிடையாது. பஸ்ஸை விட்டு இறங்கும்போதே எங்க ஆறு பேரு பெயரையும் கூப்டுண்டு எல்லாரையும் முடிஞச வரையில் கையில ரெண்டு பேரு முதுகுல ஒருத்தர் என சுமந்து கொள்ளுவார்.(அந்த நினைவுகளை இன்னும் நான் மனதில் சுமந்து கொண்டுதான் இருக்கிறேன்.)அந்த நாட்கள் சுகம். திரும்பியும் அநத வயசுக்கு போ அபபடின்னு பகவான் சொன்னா முதல் ஆளா ஓடீயே போய்யிடுவேன்.

மேல்பாடி நினைவுகள்

அப்பாவுக்கு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை மாற்றல் வரக்கூடிய அலுவலகம்
நிறைய ஊர் மாற்றாலாகி போனோம். அதல என்க்கு விவரம் தெரிஞ்ச ஊரோ இல்ல நான் ரொம்ப அனுபவிச்ச ஊரோ தெரியலை .இந்த மேல்பாடி மட்டும் ரொமப பிடிச்சி போச்சு.
ஊர சுத்தி மலை. மலைக்கு பக்கதிலேயே இருக்கற மாதிரி ஈபி குவார்ட்டர்ஸ் நாலே வீடுதான் ஸ்கூலுக்கு வள்ளிமலை போகனும் நாலு கிலோமீட்டர் இருக்கும்னு தோனறது. நடந்து தான் போகனும்.
ஜாலியான ஊர்தான் காத்தால அம்மா டிபன் பாக்ஸ்ல மதியம் சாப்ட குடுக்கற சாதத்தை போற வழியிலேயே பம்புசெட்டுல உட்கார்ந்து சாப்டுவோம். தயிர் சாதம் தொட்டுக்க பெரிசா நறுக்கின மாம்பழ துண்டு. மாம்பழ சீசன் இல்லாதப்ப நொய்கஞ்சி மோர் மிளாகய் போட்டு என்ன ஒரு டேஸட்... இப்ப கூட அதமாதிரி சாப்படனும்னு ஆசையாதான் இருக்கு. அம்மாவுக்கு உருகி உருகி பேச தெரியாது பாசத்தை வெளிகாட்டி பெரிசு பண்ண தெரியாது. ஆனா அம்மாவுக்கு எங்க மேல இருக்கிற அன்பு எங்களுக்கு மட்டுமே தெரியும் துக்கமோ சநதோஷமோ வெளிபடுத்த தெரியாத அம்மா.. ஆனா எனக்கு தலை வாரும்போது
நான் மழைல நனைஞ்சிண்டு வீட்டுக்குள்ள வரும்போது தலை துவட்டறச்ச ,சாம்பிராணி போடும் போது ,அதுல ஒரு அன்பு தெரியத்தான் செய்யும். மேல்பாடி நினைவுகளும் வள்ளிமலை நினைவுகளும் இன்னும் அப்படியே படம் பிடித்தது போல என்னுள் இருக்கிறது.


இன்னும் சொல்கிறேன்.