Saturday, December 10, 2011

அத்தை எப்போ வருவரோ?



அத்தை.................மகாலட்சுமி....எங்களுக்கெல்லாம் மாச்சி ஆத்தை. அத்தைக்கு சுகர் ஒரு கால எடுத்துட்டா ஆஸ்பத்திரில இருந்து அமுதா போன் பண்ணி அத்த செமி கோமால இருக்கா நீ வந்து பாத்துட்டு போன்னு சொன்னாள். நல்லதோ கெட்டதோ உடனே என்னோட பகிர்ந்து கொண்டுவிடனும் அமுதாவுக்கு.

சென்னைக்கு போய் அத்தைய பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம் எந்த ஒரு பங்ஷன்ல அத்தைய பார்த்தாலும் நீ மட்டுதான் கல்யாணம் ஆன நாள்ளேர்து ஆத்துக்கு வரல அப்படின்னு சொலலுவார். . இப்ப வரையா ?அப்படின்னு வேற கேப்பா எப்பவும் போக நேரமே இருக்காது. நானும் வரேன் அத்தன்னு நேரம் கிடைக்கறச்ச வரனே;னு சொலலுவேன். அத்தைக்கு எங்க மேல (கோண்டு அண்ணா பசங்க) ஆசை ரொம்ப அதிகம் அத்தைக்கு குழந்தைகள் கிடையாது. நான் சின்ன பொண்ணா இருக்கும் போது ஸ்கூல் லீPவ் விட்டா அம்பத்தூரில் பெரிப்பா ஆத்துக்கு போவோம். அப்ப அத்த எங்களைஅவா ஆத்துக்கு கூட்டிண்டு போவா. அத்தை கவர்ண்மெண்ட ஸ்கூல்டீச்சர். வீட்டுக்கு போனா எங்கப் பார்த்தாலும் நாய்குட்டி பூனைக்குட்டி .கிளி. அணில் குரங்கு எல்லாம் இருக்கும். எல்லாத்துக்கும் பேர் வச்சிருப்பா. சேர்; நாய் படுத்துண்டு இருக்கும் சமையலறை மேடை கீழே பூணை இருக்கும் மொதல்ல போகும்போது பயமா இருக்கும். கொஞ்ச நேரம் போக போக அத்த அதுங்ககிட்ட பழகறது பேசறது எல்லாம் பார்க்கும்போது அத்தைக்கு நாங்களும் அதுவும் ஒண்ணுதான் புரியும். நாமும் அதுங்களோட பழகிடுவோம். வரும் போது அதுக்கும் டாடா சொல்லிட்டுதான வருவோம்.

அத்தைய நினைக்கும்போது நிறைய நேரம் பெருமையாக தான் இருக்கும். தனக்கு குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டது கிடையாது. உறவுகளில் மிகவும் பின்னடைந்தவர்களுக்கு (பொருளாதாரத்தால் உடலால் மனத்தால் உறவுகளால்) அத்தை ஒரு ஆலமரம் சுந்தர் பையன் கார்த்திக் (சுந்தர் அண்ணாச்சி சித்தப்பா பையன். அண்ணாச்சி சித்தப்பாவே உடன் பிற்நதவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்) மனவளர்சி குன்றிய ஒரு மாற்றுதிறனாளி. அவனுடைய பெற்றவர்களே அவன் தன் மகன் என்று வளர்க்க பிரியப்படாத போது அவனை தன் மகனாக வளர்த்து. எல்லா பஙஷனுக்கும் கூ;;ப்டுண்டு வருவா .யாரவது அவனை தப்பா சொன்னலோ அருவருப்பாய் பார்த்தலோ அத்தைக்கு கோபம் வரும் . செல்லுமிடம் என்றால் சண்டைபோடுவார் இல்லையெனில் கிளம்பி விடுவார்.

கட்டிலில் அத்தைய பார்த்தேன் ஐயோ என்று இருந்தது. ஐசியுவிலிருந்து இப்பதான் நார்மல் வார்டுக்கு கொண்டு வந்திருந்தா. நாப்பது நாளா பேசவே இல்லையாம். நூன் ;போனதும் அமுதா சொன்னா அத்த திருச்சியிலிருந்து கோண்ணா பொண்ணு ஜெயந்தி வநதிருக்கா” அப்படிண்னு சொலலும் போது வா சந்தோஷம் அப்படின்னு சொன்னா திருப்பி நிறைய பேசும்போதும் சில நினைவுடன் சொன்ன பதிலாகவும் சிலது நினைவற்ற நிலையில் சொன்னதாவும் தெரிந்தது. ஆனாலும் அத்ததைய உயிருடன் பார்த்தோமே என்ற ஒரு நிறைவு எனக்கு. அத்திம்பேர் பார்க்க பாவமாக இருந்தது. சாப்பிடவில்லை ஷேவ் செய்யாத முகம் தன் துணையின் அவஸ்தைகள் அவர் முகத்திலும் மனதிலும் பிரதிபலித்தது. 'ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருந்தும் என்ன என் வேர் என நீ இருந்தாய் அதில் நான் விழுந்து விடாதிருந்தேன்' இநத பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. ஆமாம் நான் பார்த்துவிட்டு வந்து பதினைந்து தினங்களில் அத்தை எங்களைவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்.

வாய் பேச முடியாத ஜிவன்களக்கும்…..கார்திக் போன்ற கடவுளின் குழந்தைகளுக்கும் அத்தை எப்போ வருவரோ?

Sunday, September 18, 2011

2011 கொலு பொம்மைகள்

இந்த வருடம் வாங்கிய கொலு பொம்மைகள் இதோ.காய் விற்பவர்,பரமசிவன் பார்வதி,நாய்கள்,பாகவதர்கள்,குசேலன் கண்ணன்,மார்டன் மீரா இவைகள் ஸ்ரீரங்கத்தில் வாங்கியது.
                      காய்கள் தனியே ராஜஸ்தான் கைவினை கடையில் மணி வாங்கி வ்ந்தது.
                      தசாவதாரத்தில் கிருஷ்ணன் பின்னமாக உள்ளதால் கிருஷ்ணன் வாங்கி வரச் சொன்னேன்.குழலூதும் கண்ணனாக வாங்கி வந்து விட்டார்.தனி கிருஷ்ணன் வாங்க வேண்டும்.
                     அனுசுயா செட்,ஓடம்,வீடு,தாயம் செட்,கேரம் செட் எல்லாம் காதியில் வாங்கியது.
                     இந்த வருடம் மனதை கவரந்தது பரமசிவன் பார்வதி.என்ன ஒரு வேலைப்பாடு.கண்கள் பேசுகின்றன.

காய்கறி விற்பனையாளர்

குழலூதும் கண்ணன்

பரமசிவன் பார்வதி

அனுசுயா செட்

கண்ணன் குசேலன் 

சைதன்யர் 

மார்டன் மீரா

வீடு ஓடக்காரன்


தாயம் விளையாடும் பெண்கள்

கேரம் விளையாடும் குழந்தைகள்


Tuesday, April 12, 2011

பாவையின் பாசுரம்





சின்ன வயசுல ரெண்டாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன்.

அப்ப நாங்க சோளிங்கரில் இருந்தோம். மார்கழி மாதத்தில் தினமும் காலைல

அம்மாவோட தெரு முனையில ஒரு பெருமாள் கோயிலுக்கு போவோம். அப்ப

கோயில்ல திருப்பாவை போட்டி அறிவிக்கப்பட்டிருந்ததுன்னு நினைவு. நான்

கௌரி அக்கா உமா மூன்று பேரும் பெயர் கொடுத்திருந்தோம்;


அக்கா ஏழு பாசுரம்
உமா நாலு பாசுரம்
நான் ரெண்டு பாசுரம்..

அந்த வீடு ஒரு டீச்சர் வீடு நாலு பக்க தாவாரம் நடுவுல மித்தம் ரெண்டு கட்டு வீடு

சமையல் அறையிலேயே வெந்நீர் போடும் போது அம்மா பாசுரம் சொல்லி

தருவா..பாசுரத்திற்கு நடுவுல நிறைய சரிகமபதநி சேர்த்து சொல்லி தருவா.

அம்மா நன்றாகப் பாடுவா ஆனா ரொம்ப அமைதியா நிதானமா இருக்கும்.

போட்டி நாள் அண்னிக்கு காலைல புது கவுன் போட்டுண்டு கோயிலுக்கு

போனதா நினைவு.முதல்ல அக்கா , அப்புறம் மீடியம் சொல்ற மாமியாத்து ஸ்ரீமதி

அக்காவை பாசுரத்துல நடுவுல ஒரு லைன் சொல்லி அந்த பாசுரம் எதுவோ

அத பாடச்சொன்னார்கள். ஸ்ரீமதி அக்கா சொதப்பிட்டா. அடுத்து உமா அவளுக்கு

முணாவது பாசுரம் கடைசி லைன சொல்லி பாடச்சொன்னா அவளுக்கு போட்டி

அந்த எதிர்த்தாத்து மாமியோட ரெண்டாவது பொண்ணு சச்சு தான் .

உமா பாசுரத்தை கரெக்டா பாடினா ஆனா ஆர்வத்துல நடுவில் ரெண்டு முன்று

லைனவுட்டுட்டா. ஐந்து வயசுக்குள்ள இருப்பவர்களிள் நிரைய பேர் இருந்தோம்.

நான் ரெண்டாவது மூனாவது ஆளாதான் கேட்டா ரெண்டாவது பாசுரம் வையத்து

வாழவீர்காள் அதுவும் முடிவு சொல்லிதான் கேட்டா ஆனா அம்மா சொல்லி

கொடுத்தா மாதிரியே அப்படியே அபிநயம் பிடிச்சு பாடியாச்சு முதல் பரிசு பெரிய

மலைல தான் பரிசளிப்பு பெரியமலைன்னா நரசிம்சாமி மலை யோக நரசிம்மர்;

மொத்தம் 1350 படிக்கு மேல ஏறனும்.

அண்ணா ஊரிலிருந்து வந்திருந்தா, நானும் அண்ணாவும்தான பரிசு வாங்க

போனோம் பெரிய மலை ஏறனும். காலைல கிளம்பினோம் படியெ ஏற ஏற

அனுமான் வால் மாதிரி நீண்டுண்டே போச்சு. என்னால ஏற முடியல. அண்ணா

என்னை தூக்கிண்டு ஏறி போனா 5 படி இருக்கும் போதே என்னோட பெயரை

கூப்பிட்டாச்சு 3 முறை ஐயந்தி ஐயந்தி ...... கூட்டமா வேற இருந்தது.

அண்ணாதான் என்னை தூக்கி பட்டர் கிட்டக இவ தான்னு சொல்ல பரிசு

வாங்கினேன் என் வாழ்நாளில் முதலில் வாங்கிய பரிசு.

மாறாத நினைவு . பிறகு 5ஆம் வகுப்பு படிக்கும் போது பிந்துசாரன் ராஜா வேஷம்

, 6வது ல பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நாடகத்தில் பாஞ்சாலி இப்படி நிறைய

Friday, August 20, 2010

மேல்பாடி நினைவுகள் 2

அண்ணா பெங்களுரில் வேலை பார்த்தார். அவர் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் ஊருக்கு வருவார். அவர் நான் இநத தேதியில் வரேண்ணு லெட்டர் போட்டுடுவார். யாருக்கு என்ன வேணும் அப்படின்னு அவரவர்களே தனித்தனியா லெட்டர் எழுதனும் என்பது அண்ணாவின் கண்டிஷன்,அதிலும் இங்கிலீசுல எழுதற லெட்டர்க்கு என்ன கேட்டாலும் அத உடனே கிடத்துவிடும் என்பது அண்ணாவின் அடிக்குறிப்பு. அவவளவுதான்
எங்ககிட்ட இங்கலீசு படற பாடு இருக்கே.... அலுமினிய பெட்டி புஸ்தகம் எடுத்துண்டு போக, ஜாமின்றி பாக்ஸ், பென்சில், பேனா ,கவுன், என்று நிறைய....எங்களது பட்டியல் நீளும். பாவம் அண்ணா என்னா சம்பளம் வாங்குவா எப்படி சாப்பிடுவா அதெல்லாம் தெரியாது கேட்டதுல நிசச்சியம் பாதியாவது கிடைக்கும்.ஆம்மாவுக்கும் தேவைகள் இருக்கும் ஆனா சொல்லவோ கேட்கவோ கூச்சமா,என்னமோ கேட்டதாக நினைவில்லை.ஒருவேளை எனக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம்.
கௌரி அக்காகிட்ட மட்டும் சொல்வாள் “பால் குக்கர், அரிசி குக்கர் ,கணமான வெள்ள கலர்ல இருக்கற வாணலி, இதயெல்லாம் இருந்தா நன்னா இருக்கும் அண்ணாகிட்ட கேட்டு வாங்கிக்கோ கல்யாணம்
ஆனா குடும்ப நடத்தும் போது தேவைப்படும் அபபடின்னு சொலலுவா.” அக்காவுக்கும் அம்மாவுக்கும் வயசு ரொம்ப வித்தியாசம் கிடையாது.(அக்காவும் அண்ணாவும் மூத்ததாரப் பிள்ளைகள்) ஆனா அக்கா அண்ணாகிட்ட நம்மாத்துக்கு இதெல்லாம் வேணும் அப்படின்னு அம்மா ஆசையை தன் ஆசையா சொல்லி வாங்கிண்டு வரச் சொல்லி லெட்டர் போட்டுவா. அண்ணா ஊரிலிருந்து வர்றா அப்படின்னா எங்களுக்கு தூக்கமே வாராது . இராத்திரி முழுசும் தீபாவளி முதல் நாள் மாதிரி முழுச்சுண்டு போனதரவ வந்தப்ப சொன்ன ஜோக் (கடி மொக்கை தான்) பெங்களூரிலே பாத்ததா சொன்ன விஷயங்கள் எல்லாம் ரீவைண்டிங் ஆகும். காலைல ஆறு மணிக்கு பொன்னை பஸ் வரும் அதுல தான் அண்ணா வருவா. நண்டு சிண்டுகள் நாங்க எல்லோரும் அபபாவோட காக்கி சட்டையை ஆளுக்கு ஒண்ணு மாட்டிண்டு சாலையோரமிருந்த பெரிய பாறை உருட்டு கல்லுல உக்காந்துண்டு அண்ணாவின் வருகைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். ஆனா அண்ணா எங்களை எப்பவும் ஏமாத்தினது கிடையாது. பஸ்ஸை விட்டு இறங்கும்போதே எங்க ஆறு பேரு பெயரையும் கூப்டுண்டு எல்லாரையும் முடிஞச வரையில் கையில ரெண்டு பேரு முதுகுல ஒருத்தர் என சுமந்து கொள்ளுவார்.(அந்த நினைவுகளை இன்னும் நான் மனதில் சுமந்து கொண்டுதான் இருக்கிறேன்.)அந்த நாட்கள் சுகம். திரும்பியும் அநத வயசுக்கு போ அபபடின்னு பகவான் சொன்னா முதல் ஆளா ஓடீயே போய்யிடுவேன்.

மேல்பாடி நினைவுகள்

அப்பாவுக்கு மூன்று வருஷத்துக்கு ஒரு முறை மாற்றல் வரக்கூடிய அலுவலகம்
நிறைய ஊர் மாற்றாலாகி போனோம். அதல என்க்கு விவரம் தெரிஞ்ச ஊரோ இல்ல நான் ரொம்ப அனுபவிச்ச ஊரோ தெரியலை .இந்த மேல்பாடி மட்டும் ரொமப பிடிச்சி போச்சு.
ஊர சுத்தி மலை. மலைக்கு பக்கதிலேயே இருக்கற மாதிரி ஈபி குவார்ட்டர்ஸ் நாலே வீடுதான் ஸ்கூலுக்கு வள்ளிமலை போகனும் நாலு கிலோமீட்டர் இருக்கும்னு தோனறது. நடந்து தான் போகனும்.
ஜாலியான ஊர்தான் காத்தால அம்மா டிபன் பாக்ஸ்ல மதியம் சாப்ட குடுக்கற சாதத்தை போற வழியிலேயே பம்புசெட்டுல உட்கார்ந்து சாப்டுவோம். தயிர் சாதம் தொட்டுக்க பெரிசா நறுக்கின மாம்பழ துண்டு. மாம்பழ சீசன் இல்லாதப்ப நொய்கஞ்சி மோர் மிளாகய் போட்டு என்ன ஒரு டேஸட்... இப்ப கூட அதமாதிரி சாப்படனும்னு ஆசையாதான் இருக்கு. அம்மாவுக்கு உருகி உருகி பேச தெரியாது பாசத்தை வெளிகாட்டி பெரிசு பண்ண தெரியாது. ஆனா அம்மாவுக்கு எங்க மேல இருக்கிற அன்பு எங்களுக்கு மட்டுமே தெரியும் துக்கமோ சநதோஷமோ வெளிபடுத்த தெரியாத அம்மா.. ஆனா எனக்கு தலை வாரும்போது
நான் மழைல நனைஞ்சிண்டு வீட்டுக்குள்ள வரும்போது தலை துவட்டறச்ச ,சாம்பிராணி போடும் போது ,அதுல ஒரு அன்பு தெரியத்தான் செய்யும். மேல்பாடி நினைவுகளும் வள்ளிமலை நினைவுகளும் இன்னும் அப்படியே படம் பிடித்தது போல என்னுள் இருக்கிறது.


இன்னும் சொல்கிறேன்.

Saturday, July 24, 2010

நல்ல கவிதை

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல கவிதை படிக்கக் கிடைத்தது.
தோற்றப்பிழை

ஞாயிறுகளில் பொழுது புலரும் போதே
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
ஆண்மக்கள் ஓய்வெடுக்க
பெண்மக்கள் இன்றும் உழைக்க...
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.

எட்டுக்கு பிள்ளையும்,
பத்துக்கு புருசனும்
எழும் முன்னே காலை உணவும்,
மதியம் உண்ண கறி உணவும்
சமைத்து விட்டு,
நான் சாப்பிட நேரமிருக்காது.

வாரமாய் சேர்ந்த அழுக்காடைகள்...
கொட்டிக் கிடக்கும் குப்பைகள்...
சிதறிய நாளிதழ்கள்...
உண்டு தூங்கும் கணவனின்
தூக்கம் கலைக்காமல்
அறை கூட்டி முடிக்கையில்
மணி மதியம் மூன்று.

குளிக்கச் செல்கையில்
பசியோடு வந்தான் என் பிள்ளை.
பரிமாறிவிட்டு நான் உண்ண உட்கார்ந்தால்,
புருசனின் துணிகள் இன்னும்
தேய்க்கப்படவில்லையாம்.

இனியேது எனக்குப் பசி?
சமையலறை ஒழித்து
தொலைக்காட்சியில் படம் பார்க்க
அமர்ந்த வேளையில்,
வந்தது சொந்தக்காரர்கள் கூட்டம்.

ஓய்ந்தொழிந்து தூங்கப்போனேன்.
புருசனின் பசியில் என் பசி அடங்கிற்று.

ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
இனி வேண்டாம் ஞாயிறு விடுமுறை.
தேவை இனி திங்கள் விடுமுறை.